தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை மேல் முறையீட்டு தீர்ப்பாயம்

Justice B. Rajendran
Chairperson, TNREAT

தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் - ஓர் கண்ணோட்டம்

மத்திய அரசு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) சட்டம், 2016னை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆணை எண் (MS) 112, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள் 22.06.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017 னை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) குழுமத்தின் முடிவு, வழிகாட்டுதல் அல்லது உத்தரவின் மீது மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதனால் ஏற்படும் விளைவுகளின் மீது மேல்முறையீடு செய்ய அரசு, தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை மேல் முறையீட்டு ஆணையத்தினை அமைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.103, நாள் 24.07.2018 மூலம் இவ்வாணையம் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குட்பட்ட தீர்ப்புகளின் மீதான மேல்முறையீடுகளையும் கேட்டு தீர்ப்பளிக்கலாம் என அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் அல்லது அதன் விசாரணை அதிகாரியின் முடிவு, வழிகாட்டுதல் அல்லது உத்தரவினால் பாதிக்கப்பட்ட யாதொரு நபரும் அதன் மீது அதிகார வரம்புள்ள மேல்முறையீட்டு ஆணையத்திடம் முறையிடலாம். சட்டப்பிரிவு எண் 44(1)-ன் கீழ் அளிக்கப்பட்ட ஒவ்வொரு மேல்முறையீட்டிற்கும் ரூ.1000/- (ரூபாய் ஆயிரம்) மட்டும் கட்டணமாக செலுத்தவேண்டும். ஒவ்வொரு மேல்முறையீடும் படிவம் "L" - ல் கீழ்க்கண்ட சான்றுகள் அளிக்கவேண்டும்.

அ) எந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்யப்படுகின்றதோ அதன் சான்றளிக்கப்பட்ட நகல்

ஆ) மேல்முறையீட்டாளரால் மேல்முறையீடு செய்வதற்கு ஆதாரமாக கருதி, முறையீட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்

இ) அளிக்கப்படும் ஆவணங்களின் பட்டியல்